×
 

யாராக இருந்தாலும் கலங்கி போயிருப்பாங்க… அப்படி ஒரு துயரம்! அன்பில் மகேஷ் வேதனை…!

கரூர் சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க! வதந்திகள் குறித்து முதல்வர் வேதனை...!

இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் சடலங்களைக் கண்டு கதறி அழுதார். இந்த நிலையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் சம்பவம் குறித்து விவரித்தார். முதல்வர் சொன்னதைப் போல எந்த தலைவனும் தொண்டர்கள் பலியாவதை விரும்பமாட்டார்கள் என தெரிவித்தார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது கரூருக்கு செல்லுமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தார்.

பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்ததைக் கண்டு கண்கலங்கியதாகவும், யாராக இருந்தாலும் அந்த இடத்தில் கண்கலங்கி போய் இருப்பார்கள் எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: அது எப்படி சொல்லிவெச்ச மாதிரி டக்கு டக்குனு நடந்துச்சு… சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share