அது எப்படி சொல்லிவெச்ச மாதிரி டக்கு டக்குனு நடந்துச்சு… சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்…!
கரூர் சம்பவத்தில் திட்டமிட்ட சதி நடந்து இருப்பதாக தமிழக வெற்றி கழகம் குற்றம் சாட்டும் நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழக அரசியலில் புதிய அலை என கூறப்படும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவரை காண்பதற்காக அவரது தொண்டர்கள் அலைகடலென குவிந்து உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதேபோல் தான் கரூர் மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் அந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூர் சம்பவத்தை அறிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். சம்பவம் நிகழ்ந்த உடனேயே பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார்
கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 4 மணி நேரம் விஜய் தாமதமாக வந்தார் என்றும் உடல் சோர்வு ஏற்பட்டு மக்கள் மயங்கியதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் விதிமுறைகளை நாங்கள் சரியாக தான் பின்பற்றினோம் எனவும் தமிழக வெற்றிக்கழகம் முறையிடுகிறது.
இறந்தவர்களின் உடல்களை இரவோடு இரவாக, உடற்கூறு ஆய்வு செய்து அவசர அவசரமாக ஒப்படைத்து விட்டார்கள் என்றும் விஜய் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து இதில் செயல்பட்டு இருப்பதாகவும், விஜய்க்கு எதிராக சதி வலை பின்னப்பட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதில் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகமாகி மூச்சு திணறல் ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் நிகழ்விடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும் என்றும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் பிரச்சாரம் திட்டமிட்டே தாமதம்... எதற்கு தெரியுமா? FIR-ல் பகீர் தகவல்...!
இதில் திமுகவின் சதி செயல் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், சம்பவம் நிகழ்ந்த உடனேயே முதலமைச்சர் அறிக்கை விட்டதாகவும், அமைச்சர்கள் ஜெட் வேகத்தில் கரூருக்கு விரைந்ததாகவும், இரவோடு இரவாக முதலமைச்சர் சென்றதாகவும், ஒரே இரவில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்துவிட்டதாகவும், சொல்லி வைத்ததைப் போலவே நடந்து கொண்டதாகவும் சந்தேகங்களை சமூக வலைத்தளங்களில் கிளப்பி வருகின்றனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், திமுக மீதும் காவல்துறை மீதும் குற்றம் சுமத்தும் தமிழக வெற்றிக்கழகம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனை குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் தமிழக வெற்றி கழகத்தின் மீதும் திமுகவின் மீதும் முன்வைக்கப்பட்டாலும் முறையான விசாரணை நடைபெற்ற பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் "திட்டமிட்ட சதி"... குண்டைத் தூக்கிப் போட்ட தவெக...!