×
 

மனதை ரணமாக்கிய கரூர் துயரம்... நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

கரூர் துயரச் சம்பவத்தின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டம் வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 அப்பாவி உயிர்கள் பலியாகின. சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. அந்த துயர சம்பவத்தின் நினைவாக தவெக சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு இன்றைய கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது வெளியானது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூருக்கு முதன்முறையாக வருகை தந்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். அவர்களில் 32 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை நியமன ஆணைகளையும் வழங்க இருக்கிறார். மேலும், கரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

கரூர் சம்பவம் நடந்தபோது விஜய் தவெக தலைவராக இருந்தார். அந்தக் கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் சோகமாக முடிந்தன. சம்பவத்துக்குப் பிறகு விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் சந்தித்து ஒவ்வொரு உயிரிழந்த குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் அளித்திருந்தார். “விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன்” என்றும் உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்ற உள்ளார். 

இதையும் படிங்க: 285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், “கரூர் சம்பவம் என் மனதை விட்டு எப்போதும் நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்காகவே கரூரில் தவெக சார்பில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இனி ஒரு அரசியல் சதி, அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கக் கூடாது” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

இதையும் படிங்க: பாட்டுக்கு பாட்டு கச்சேரி..! எங்களுக்கும் தெரியும்... இழுத்து மூடுங்க பேரவை கதவை..! முதல்வர் விஜய் ஃபயர் ஸ்பீச்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share