×
 

#BREAKING: கரூரில் பெரும் துயரம்.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. கதறும் உறவினர்கள்..!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். விஜய்யை காணவும் அவரது பேச்சை கேட்கவும் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வந்த சூழலில், பலி எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING இதுதான் உங்க டக்கா? தவெக கோட்டையாக மாறிய கரூரில் ஆளும் கட்சியை கிண்டலடித்த விஜய்..!!

இந்த சம்பவத்தை தொடர்ந்து கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோரும் நேரில் வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன் கரூர் விரைந்துள்ளனர்.

இந்த நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர், தவெகவின் இந்த அரசியல் பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிலான போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். உள்ளூர் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைகளில் இடம் இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கும் இந்த சம்பவம் தவெக-வின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கலாம் என அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மேலும் கரூர் மக்கள் இன்று கூட்ட நெரிசல் குறித்து பதற்றத்தில் உள்ளனர். அரசு உரிய இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டு பாடி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்த விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share