நான் எந்த தப்பும் செய்யல... சட்ட ரீதியா சந்திப்போம்..!! K.N. நேரு, R.S. பாரதி பிரஸ்மீட்..!!
அமைச்சர் நேரு மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்போம் என திமுக உறுதிப்படுத்த தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அது தொடர்பாக அமைச்சர் நேருவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி, வழக்கை எதிர்கொள்ள திமுக சட்டத்துறை தயாராக உள்ளது என்று கூறினார்.
அமலாக்கத்துறை கடிதம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் சட்ட ரீதியாக வழக்கை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கே.என் நேருவின் தேர்தல் பணியை தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். விரிவான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என அமைச்சர் நேரு விளக்கமளித்தார். உரிய நீதிமன்றத்தை அணுகி நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஆர். எஸ் பாரதி, அமலாக்கத்துறை வழக்கையில் சட்டரீதியாக சந்திப்போம் அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் திமுகவை கலங்கப்படுத்தும் நோக்கத்தில் தான் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஸ் டே சர்ப்ரைஸ்... நாசமா போச்சு..! கணவனுக்கு பரிசு கொடுத்த மனைவி மீது வழக்கு..!
ப. சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள் என்றும் அந்த அமலாக துறையின் வழக்கு என்னவானது எனவும் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுக நிர்வாகி இன்ப துரை மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அச்சுறுத்தலுக்கும் அழுதத்திற்கும் கே.என். நேரு அடிபணிய மாட்டார் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!