#BREAKING அதிகாலையிலேயே ஷாக்...!! - தண்டவாளத்தில் மண் சரிவு... தடம் புரண்ட விரைவு ரயில்... பயணிகளின் நிலை என்ன?
குமரி–கேரள எல்லையான நெய்யாற்றின்கரை–பாறசாலை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளாவிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி–கேரள எல்லைப் பகுதியான பாறசாலை அருகே இன்று அதிகாலை 2.10 மணியளவில் மழை காரணமாகத் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண் சரிவு காரணமாக, பிலாஸ்பூர்–திருநெல்வேலி விரைவு ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியுள்ளது. நெய்யாற்றின்கரை–பாறசாலை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிலாஸ்பூர்–திருநெல்வேலி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது குறித்து உடனடியாகத் திருவனந்தபுரத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்டவாளத்தில் விழுந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாமதமான ரயில் சேவை... கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை இடையே பழுதான சிக்னல்..! பயணிகள் கடும் அவதி!!
இதேபோல், தாம்பரம்–திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்த பாரத் விரைவு ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை–புனலூர் விரைவு ரயில் பணக்குடி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் அமிர்த பாரத் விரைவு ரயில் நாங்குநேரி பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், மங்களூர் சென்ட்ரல்–கன்னியாகுமரி பரசுராம் விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!