#weatherupdate: வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி ... வானிலை மையம் அறிவிப்பு!
கேரளா - கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. வடக்கிழக்கு பருவுமழை தொடங்கிய பிறகு உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கு பிறகு உருவாகி இருக்கக்கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலெழுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலவரப்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரள -கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே... வெளுக்க போகுது மழை...!
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. கேரளா - கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை! எத்தனை புயல் வரும்... என்னென்ன நடக்கும்..? தென் மண்டல தலைவர் அமுதா விளக்கம்...!