வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை! எத்தனை புயல் வரும்… என்னென்ன நடக்கும்..? தென் மண்டல தலைவர் அமுதா விளக்கம்…!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுவை, காரைக்கால், கேரளா கர்நாடகா, கடலோர ஆந்திர பிரதேசம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் 16ஆம் தேதி வரை வழக்கத்தை விட கூடுதலாக 37 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு 50 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 18ஆம் தேதி கேரளா, கர்நாடக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அக்டோபர் 24ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை புயல்கள் வரும் என்பதை கணக்கிட்டு கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #weatherupdate: வெளுக்க போகுது மழை… 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படிங்க: #rainalert: வெளுக்க போகுது மழை… குடை எடுத்தாச்சு… 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी