பரபரப்பு...L&T நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி பலி! ஊழியர்கள் போராட்டத்தில் கல்வீச்சு
எல் அண்ட் டி நிறுவனத்தில் வட மாநில தொழிலாளி பலியானதை அடுத்து சக பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.
எல்&டி நிறுவனம், இந்தியாவின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக, 1938ஆம் ஆண்டு டேனிஷ் பொறியாளர்களான ஹென்னிங் ஹோல்க்-லார்சன் மற்றும் சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம், கட்டுமானம், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பங்களித்து வருகிறது.
காட்டுப்பள்ளி கப்பல் கட்டுதளம், எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமானப் பிரிவான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் (L&T Shipbuilding Ltd) மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்தத் தளம், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) உடன் இணைந்து இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு, இந்த கப்பல் கட்டுதளம் மற்றும் அதனுடன் இணைந்த துறைமுகத்தை அதானி குழுமத்தின் அதானி காட்டுப்பள்ளி துறைமுக தனியார் நிறுவனம் வாங்கியது. இருப்பினும், எல் அண்ட் டி நிறுவனம் இந்தத் தளத்தில் கப்பல் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒரு மணி நேரத்தில வாஷ் அவுட் ஆகணும்! காவல்துறைக்கு மதுரை கிளை அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் L&T நிறுவன கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதை எடுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கப்பல் கட்டும் பணியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சகப்பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாறி மாறி கற்களை வீசிக் கொண்டதால் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்கள் கைது? ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிப்பு.. தயார் நிலையில் வாகனங்கள்!