#BREAKING: தூய்மை பணியாளர்கள் கைது? ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிப்பு.. தயார் நிலையில் வாகனங்கள்!
போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்ல தூய்மை பணியாளர்கள் மறுக்கும் நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட உள்ளனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் தூய்மை பணியாளர்களின் அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை இயக்க தூய்மை பணியாளர்கள் மறுத்தனர்.
ரிப்பன் மாளிகை முன்பு இருந்து கலந்து செல்ல மறுத்துள்ளனர். அமைதியாக தாங்கள் போராடி வருவதாகவும் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் தாங்கள் இடைஞ்சல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மண்டையை உடைத்த திமுக பெண் கவுன்சிலர்... ராகு காலத்தில் புகார் எடுக்க மாட்டோம் என மறுத்த போலீஸ்!
மாநகராட்சி அலுவலகம் முன்பு தான் போராட முடியும்., தனியாக மைதானத்தில் எதற்காக நாங்கள் போராட வேண்டும்., நாங்கள் விளையாட வா செல்கிறோம் எனக் கேட்டனர்.
நீதிமன்றமும் அரசாங்கமும் எங்களை கைவிட்டு விட்டார்கள் இன்று வேதனை தெரிவித்த தூய்மை பணியாளர்கள், தங்களின் அமைதியான போராட்டத்தை ஜெயிக்க விடுங்கள் என்றும் மாநகராட்சி அலுவலகம் முன்புதான் போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
பணி நிரந்தரம் செய்து அனைவரையும் அனுப்பி விடுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று கூறிய அவர்கள், நீதிமன்றம் தங்களுக்காக பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தங்களை சீண்டினால் போராட்டம் வீரியம் எடுக்கும் என்றும் தங்கள் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்றும் எச்சரித்தனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிப்பன் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கலைந்து செல்ல மாட்டோம் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கும் நிலையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
தூய்மை பணியாளர்களில் அழைத்துச் செல்ல வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
கலைந்து செல்ல மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான வாகனங்களும் போராட்டம் நடத்தும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பரபரப்பு… பூசாரிகளிடையே மோதல்! திணறும் அறநிலையத்துறை அதிகாரிகள்