ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!
லக்கி பாஸ்கர் திரைப்படம் பாணியில் கோடிக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்.
தேனி அருகே கனரா வங்கியில் ரூ 11.63 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் கார்த்திக் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு. தலைமறைவாக இருக்கு மேலாளர் கார்த்திக் -க்கு போலீஸ் வலைவீச்சு.
துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வங்கியில் பணியாற்றும் கதாநாயகன் வங்கி பணத்தை வைத்து கோடீஸ்வரன் ஆவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் நடைபெறும் மோசடி போன்றே தேனியில் ஒரு சம்பவம் அரங்கேரி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் தனது பகுதிக்கு அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் மேலாளராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில். கடந்த மே மாதம் பணிமாறுதலில் குச்சனூர் அருகே உள்ள கூழையனூர் கிராமத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் பணி புரிந்து வந்தார்.
இதையும் படிங்க: நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!
இந்நிலையில் ஓடைப்பட்டி கிளைக்கு வந்த புதிய மேலாளர் நகைக்கடன்கள் குறித்து சோதனை செய்த போது வங்கியில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரியவந்துள்ளதை தொடர்ந்து மண்டல மேலாளருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வரா கடன்கள் குறித்து ஆய்வு செய்த போது நகைகடன் பெற்றதற்கான ஆவணமும் இல்லை மேலும் லாக்கரில் நகைகளும் இல்லை. மேலும் போலி குழுக்கள் உருவாக்கி கடன் பெற்று இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலாளர் கார்த்திக் பணியில் இருந்த கால கட்டத்தில் போலியான 100 க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கடன் பெற்ற கார்த்திக் தன்னுடைய மாற்று வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்து உள்ளார். மேலும் போலி சுய உதவிக்குழுக்கள் பெயரில் நகை கடன்கள் பெற்று தனது கணக்கில் வரவு வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலாளர் கார்த்திக் பணியாற்றி வரும் கூழையனூர் கிளை வங்கியில் சோதனை செய்ததில் இதே போன்று மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலாளர் கார்த்திக் பணிபுரிந்த ஓடைபட்டி மற்றும் கூழையனூர் என இரு கிளைகளில் சுமார் ரூபாய் 11 கோடியே 63 லட்சம் வரை மேலாளர் கார்த்திக் மோசடி செய்திருப்பது இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்து.
அதனைத் தொடர்ந்து வங்கியின் மண்டல மேலாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மேலாளர் கார்த்திக் தேடி வருகின்றனர்.
இந்த பண மோசடி தெரிய வந்ததை தொடர்ந்து ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் வங்கியில் மேலாளர், எழுத்தர், வங்கி அலுவலர் என 9 நபர்களை வங்கி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்.
லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வங்கி பணத்தை வைத்து துல்கர் சல்மான் கோடீஸ்வரர் ஆகி யாரிடமும் சிக்காமல் வெளிநாடு சென்றுவிடுவார் அதனாலேயே லக்கி பாஸ்கர் என்ற பெயரை வைத்தனர் .ஆனால் இங்கோ வங்கி பணத்தை மோசடி செய்த மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ததால் இவரை அன்லக்கி கார்த்திக் என்று தான் கூற வேண்டும்.
இதையும் படிங்க: 2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!