×
 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக  19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சொத்துக்களை   முறைகேடாகப் பத்திர பதிவு செய்த விவகாரம். துணை ஆட்சியர் அன்பழகன், முன்னாள் விஏஓ அரசன்  ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சொத்துக்களை   முறைகேடாகப் பொது அதிகாரம்  மற்றும் அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். 

இதன் பேரில், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக  19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: மதுரை AIIMS..! வெளி நோயாளிகள் பிரிவு எப்போது செயல்படும்.? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!!

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  மாவட்ட துணை ஆட்சியர் அன்பழகன், முன்னாள்  வி ஏ ஓ அரசன் ஆகியோர்  ஜாமின் வழங்க கோரி  உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் முன்  விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை  கேட்டிருந்த நீதிபதி தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து இரண்டு பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,

இதையும் படிங்க: மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share