×
 

நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!

அதிகார பகிர்வு குறித்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் சமீபத்தில் தமிழக அரசியலில் மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறார். காரணம், அவர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகார பகிர்வு கோரிக்கைதான். திமுகவுடனான கூட்டணியில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியிலும் காங்கிரஸுக்கு உரிய பங்கு வேண்டும் என்பதை அவர் தெளிவாகவும் திரும்பத் திரும்பவும் சொல்லி வருகிறார். இது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாணிக்கம் தாகூர் இதை முதலில் பேசத் தொடங்கியபோது, தமிழகத்தில் கூட்டணி அரசியல் தவிர்க்க முடியாதது என்று சொன்னார்.

கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்று வலியுறுத்தினார். ஆனால் இப்போது வெறும் தொகுதி பங்கீடு மட்டும் போதாது, ஆட்சியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெளிவுபடுத்தினார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வெற்றி பெற்றால், அது வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டும் இருக்கக் கூடாது, ஆட்சி நிர்வாகத்திலும் பங்கு இருக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார்.

சமீபத்தில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், வரும் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டு 160 வரை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடியாக மாணிக்கம் தாகூர் கூறிய போது, 2021 தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 இடங்களில் வென்றது என்று நினைவூட்டி இருந்தார். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வியடைந்த இடங்களைத்தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறியுள்ளார். இது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... முனைப்பு காட்டும் அதிமுக..! பிப்.21 முதல் மீண்டும் EPS சுற்றுப்பயணம்..!

இதற்கு முன்பும் மாணிக்கம் தாகூர் பலமுறை இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான மாடலை உதாரணமாகக் காட்டி, அங்கு அதிகாரம் பகிர்ந்து ஆள்வது எப்படி வெற்றிகரமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். தமிழகத்திலும் அதுபோன்ற முறை வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். மேலும், மக்கள் யாருக்கு ஆட்சி கொடுக்க விரும்புகிறார்களோ அதைத்தான் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று சொல்லி, ஒற்றைக் கட்சி ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை மக்களே முடிவு செய்யட்டும் என்று நிலைப்பாடு எடுத்தார். இந்தக் கோரிக்கைக்கு திமுக தரப்பிலிருந்து தெளிவான எதிர்ப்பு வந்துள்ளது.

இதையும் படிங்க: இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share