×
 

என்ன சார் நியாயம்..? துரோகத்தை மூடி மறைக்க இப்படியா..? நயினாரை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் செய்த துரோகங்கள் என கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார்.

தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா என்றும் இது நியாயமா எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக நீங்கள் அரசியல் பழிவாங்கலுக்காக உருட்டிய 'நேஷனல் ஹெரால்டு' புகாரை டெல்லி நீதிமன்றம் தூக்கி எறிந்துவிட்டதே, அது தெரியுமா என்று கேட்டார்.

ED தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கே ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது நீதிமன்றம். இன்றுவரை எந்த ஒரு குற்றச்சாட்டோ, கிரிமினல் வழக்கோ நிரூபிக்கப்படாத நிலையில், இன்னும் எதை வைத்துப் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 

கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் நீங்கள், 2015-ல் அருணாச்சல பிரதேசம் முதல் 2026-ல் தமிழ்நாடு வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை கலைக்க முற்பட்டதை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார். தமிழகம் கொடுக்கும் வரிப் பணத்தில் 29 பைசா மட்டுமே திரும்ப வருகிறது என்பது அதிகாரப்பூர்வ நிதித்துறை தரவு என கூறிய மாணிக்கம் தாகூர், இதை பொய் என்று மறுக்க உங்களால் முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு... மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

வாட்ஸ்அப் பல்கலைக்கழக கதைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்காமல், தமிழகத்திற்கு இழைக்கப்படும் தொடர் நிதி அநீதிக்கும், ராமர் கோவில் கொள்ளைக்கும் முதலில் பதில் சொல்லுங்கள் என்றும் மாநில சுயாட்சியைத் துண்டாட நினைக்கும் உங்கள் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காக்கவும் காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தார்மீகத் தகுதியோடு, சமரசமற்ற தன்மானக் குரலாய் என்றும் ஒலிக்கும் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: தவெக 'இண்டி' கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share