×
 

சோகத்தின் முடிந்த மாரத்தான்... 24 வயது இளைஞர் உயிரிழந்த துயரம்...!

சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியின் போது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

2025 ஆம் ஆண்டு, பல்வேறு விழிப்புணர்வு மாரத்தான்கள் இந்த நகரத்தில் நடைபெற்று வருகின்றன, அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு, ரத்ததானம், போதைப்பொருள் எதிர்ப்பு, மற்றும் உணர்ச்சிக் கோளாறுகள் கொண்டவர்களின் உரிமைகள் போன்ற தலைப்புகளை முன்னிறுத்துகின்றன.

இந்த போட்டிகள், ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் குடும்பங்களையும் ஒன்றிணைத்து, உடல் ஆரோக்கியத்துடன் சமூகப் பொறுப்பையும் ஊக்குவிக்கின்றன. மாரத்தான், மினி மாரத்தான் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சமூகத்தின் மீதான பொறுப்பையும் இது போன்ற நிகழ்வுகள் முன்னிறுத்துகின்றன. கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. 

குறிப்பாக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மரத்தான் போட்டிகளும் நடக்கின்றன. இதேபோல் தான் சென்னை கோட்டூர்புரம் அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது. உற்சாகமாக தொடங்கிய மாரத்தான் போட்டி சோகத்தில் முடங்கியது. இந்த போட்டியின் போது 24 வயது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எந்த நிலையில் இருக்கு? மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்...!

வங்கியில் பணியாற்றி வந்த பரமேஷ் என்ற 24 வயது இளைஞர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பரமேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் வருது… ரூ.10 லட்சம் கொடு! அண்ணாமலையின் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்… பகீர் கிளப்பும் வீடியோ…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share