கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!
கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு எனக் கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதியில், சட்டவிரோதமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும், வறுமையில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக பவர் லூம் மற்றும் டையிங் மில் தொழிலாளர்கள், 5-10 லட்ச ரூபாய் பண வாக்குறுதியுடன் கிட்னி விற்க தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில், திமுகவுடன் தொடர்புடைய மருத்துவமனைகள் மற்றும் பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு திமுக அரசு மறைமுக ஆதரவு அளிப்பதாகவும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாமக்கல்லில் நடந்திருப்பது கிட்னி திருட்டு இல்லை., முறைகேடு என தெரிவித்தார். ஒருவருக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு என்றும் தற்போது நடந்துள்ளது முறைகேடு எனவும் விளக்கம் அளித்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவா முடியும் என கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் நாமக்கல்லில் கிட்னி முறைகேடு நடந்ததாக கூறினார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக தெரிவித்தார். ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா என்றும் இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: என் சம்பந்தி வீட்டுல ரெய்டா? அமைச்சர் நேருவுக்கு இபிஎஸ் பதிலடி...
இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா என்றும் இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: 2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி.. சீக்கிரமே நல்ல சேதி வரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!