×
 

#BREAKING: திமுகவுக்கு குட்பை..! கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக அதிரடி அறிவிப்பு..!!

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் கூட்டணி மறுசீரமைப்பு அலைகளில் முக்கிய திருப்பமாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை தனது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, ஒன்பது ஆண்டுகால கூட்டணி உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளனர். 

மதிமுகவின் இந்த முடிவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல் பெரிய கட்சிகளில் ஒன்றாக மதிமுக இணைந்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) போன்ற கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த நிலையில், மதிமுகவின் விலகல் திமுகவின் கூட்டணி அமைப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. 

மதிமுகவும் திமுகவும் நீண்டகாலமாக திராவிட இயக்க பின்னணியைப் பகிர்ந்துகொண்டாலும், வைகோவின் கட்சி 2017-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான முற்போக்கு சமூக நீதிக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தது. 2026 தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், கூட்டணியில் மதிமுகவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தொகுதி ஒதுக்கீடு மற்றும் சுய சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுப்பு போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

இதையும் படிங்க: கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!

வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிறிய கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மதிமுக தனது சுயமரியாதையை இழந்து கூட்டணியில் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் வைகோ பகிரங்கமாகக் கூறியிருந்தார். குறிப்பாக, தேர்தலில் பிற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட போது மதிமுக மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிர்பந்திக்கப்பட்டது பெரும் வலியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: "வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..! வைகோ எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share