விடிந்ததுமே விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... விரைவில் திறக்கப்படும் மேட்டூர் அணை... எப்போது தெரியுமா?
குறுவை பொய்த்துப்போன நிலையில், சம்பா சாகுபடிக்காவது தவெக அரசு தண்ணீர் திறக்குமா என்ற எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
வறண்ட காவிரி, வற்றிய மேட்டூர் அணை என கடும் வறட்சியால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியவில்லை. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் நடபாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான ஜூன் 12 தண்ணீர் திறக்க முடியவில்லை.
மேலும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசை திமுக அரசு வலியுறுத்தவில்லை. இதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பொய்த்துப்போய்விட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்து, அதன் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்க வேண்டும் என்று தஞ்சை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் தலையிட்டதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி என்ற முறையில் 15 நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அதனடிப்படையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்துகொண்டிருக்கிறது. இதில் பொய்த்துப்போன குருவைக்குப் பிறகு, தற்போது சம்பா சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.
இதையும் படிங்க: “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசத்திற்கு தண்ணீர் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததை எடுத்து காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினர்.
தற்போதுஅணையின் நீர்மட்டம் தற்போது 88.21 அடி எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் நீர் வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மேட்டூர் அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதனை அடுத்து நேற்று மேட்டூர் அணையின் வலது கரையில் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, பாசனத்திற்காக வரும் 28ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரிப் படுகை உழவுப் பணிக்காக மேட்டூர் அணையை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திறக்க உள்ளதாக தகவல். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருவதால் நீர் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!