EPS சொல்றது சுத்தப் பொய்... விவசாயிகளுக்கு இதை செஞ்சிருக்கோம்... அமைச்சர் சக்கரபாணி விளக்கம்...!
நெல் கொள்முதல் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். நடப்பாண்டு நெல் வரத்து பதிமூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் அனுமதி பெற்று செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், மேட்டூர் நீர் திறக்கப்பட்டதால் கூடுதலாக 6.3 லட்சம் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.
ஆனால் நாள் ஒன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் ஆயிரம் முட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது குறைந்த அளவில் மட்டுமே நெல் மூட்டைகள் கொள்வது செய்யப்படுவதாகவும் இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்
இதையும் படிங்க: மத்திய அரசே காரணம்… முடிஞ்சா PERMISSION வாங்கி தாங்க இபிஎஸ்! பேரவையில் அமைச்சர் பதிலடி…!
அப்போது,நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: செம்ம...! நெல் கொள்முதல் விவகாரம்… பேரவையில் குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி…!