அடிதூள்... விடுபட்ட மகளிருக்கு 3ம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கப்படும்... அமைச்சர் சொன்ன குட்நியூஸ் ...!
3ம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
இனி மூன்றாவது முறையும் மகளிர் உரிமை திட்டத்தை அமல்படுத்துவோம் - மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் தகவல்.
தமிழகத்தில் விடுபட்ட மகளிருக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்டமாக வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிலையில் காணொளி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 975 பேருக்கு வழங்கப்பட்டு வரும் சூழலில் புதிதாக 63 ஆயிரத்து 813 விண்ணப்பங்கள் வரப்பட்ட நிலையில் அதில் 33450 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுi அவர்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: குட்நியூஸ்...!! விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நமது மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட உள்ளது. இது இதோடு நின்று விடாது இனி மூன்றாவது முறையும் இந்த திட்டத்தை அமல்படுத்துவோம். தமிழகத்தின் முதல்வர் தளபதி ஆட்சியில் பெண்கள் விவரம் பெற்றவர்களாக உள்ளார்கள் என பேசினார்.
இதையும் படிங்க: தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!