×
 

மீண்டும் ஊதிய உயர்வு... கவுரவ விரிவுரையாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்... அமைச்சர் கொடுத்த அப்டேட்..!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மீண்டும் திமுக ஆட்சி அமையும் போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பெயர் பலகையை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து முன்னாள் மாணாக்கர் சங்கத்தின் நிகழ்ச்சிகளிலும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அரசினர் கலைக் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு 15,000 ரூபாயாக ஊதியம் வழங்கப்பட்டது என்றும் கூறினார்.

இதனை 2021 ஆம் ஆண்டு மேலும் ஐந்தாயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கியதும் திமுக அரசு என்றும் தெரிவித்தார். கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட 20,000 ஊதியத்தை கடந்த 2024 ஆம் திமுக ஆட்சிக் காலத்தில் தான் மேலும் ஐந்தாயிரம் ரூபாய் உயர்த்தி 25,000 ரூபாயாக வழங்கியதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் இதே திமுக ஆட்சியில்தான் ஐந்தாயிரம் ரூபாய் ஊதியத்தை உயர்த்தி 30,000 ரூபாயாக கவுரவ விரிவுரைகளுக்கு வழங்கியது என்றும் குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

இந்த ஊதியம் இவர்களுக்கு போதுமானது இல்லை என்றும் இவர்களுக்கு ஊதியத்தை மேலும் உயர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோப்புகள் நிதித்துறையில் உள்ளது என்றும் மீண்டும் திமுக ஆட்சி அமையும் போது அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்

இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share