வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ரூ.2500 எப்போது..? காத்திருக்கும் பெண்கள்..!! அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்..!

மகளிருக்கு 2500 ரூபாய் வழங்குவது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம் அளித்தார்.

தகவல் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தேர்தல் சமயத்தில் 2,500 ரூபாய் வழங்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். அண்ணா அறிவிப்பை ஏற்கெனவே பலமுறை தெரிவித்துவிட்டோம் என்றும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகள் உள்ளன. அவற்றைச் சரிசெய்து, கடைக்கோடி மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். இதற்காக மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்பேரில் உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, முழுமையாகச் செயல்படுத்தத் தயாரான பிறகு அதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்று அவர் தெரிவித்தார்.நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நுரை ஏற்படுவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் துறை சார்ந்த விளக்கத்தை அளித்துவிட்டார்கள் என்று நன்றி தெரிவித்தார்.தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்துப் பேசிய அவர், நாங்கள் சிறுவயது முதலே இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், மக்கள் கூட்டத்தையும் பார்த்து வருகிறோம் என்றார்.

இன்று தமிழக முதலமைச்சர், தலைவர் தளபதியின் ஆட்சியில் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும், காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிலும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான முறையிலும் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்று அவர் குறிப்பிட்டார்.சென்னையில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த விதம் குறித்துப் பேசிய அமைச்சர், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன என்றார்.

இதையும் படிங்க: “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” … நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’… காரசார விவாதம்…!

பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து, மரியாதை செலுத்திவிட்டு, எந்தவித இடையூறும் இல்லாமல் திரும்பிச் செல்லும் வகையில் காவல்துறையினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஊடகப் பிரதிநிதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். அமைச்சர்கள் வந்தாலும் தள்ளுமுள்ளு ஏற்படாமல், விரைவாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தறிகெட்ட தவெக அரசு..! கைதிகள் தப்பியதற்கு துறை அமைச்சருக்கு அதிக பொறுப்பு.! ஜெயக்குமார் டைரக்ட் அட்டாக்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी