"Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!
Wildlife of Tamilnadu என்ற புத்தகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து வழங்கிய wildlife of tamilnadu புத்தகம் வெளியிடும் நிகழ்வு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் புத்தகத்தை வெளியிட இந்து குழுமத்தின் பியூரோ தலைவர் ரம்யா கண்ணன் புத்தகத்தின் முதல் படியினை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Wildlife Of Tamil Nadu புத்தகம் தமிழ்நாட்டின் கண்கவர் இயற்கை நிலப்பரப்புகளின் காட்சி பூர்வமான மற்றும் கதையாடல் பயணத்தை விளக்குவதோடு நிலப்பரப்புகளை உருவாக்கும் விலங்கியல் உலகம், சூழலியல் அமைப்புகள் மற்றும் கலாச்சார வரலாறுகளை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!
மேலும் நிலப்பரப்புகளின் வழியாக, கடற்கரைகள், ஈரநிலங்கள், காடுகள் மற்றும் மலைகள் அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பதையும், அவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர வாழ்வாதாரமாக உள்ளன என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குவதோடு தமிழ்நாட்டின் காட்டு இயற்கை நிலப்பரப்புகளை மீண்டும் அறிந்து கொள்ள உதவுவதோடு வருங்கால தலைமுறைகளுக்காக இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாகவும் இந்த புத்தகம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து வழங்கிய சிறப்பு வாய்ந்த wildlife of tamilnadu புத்தகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!