×
 

மீண்டும் திராவிட மாடல் 2.0 தான்... தமிழ்நாட்டுப் பெண்கள் மகுடம் சூட்டுவார்கள்.. அமைச்சர் நேரு உறுதி..!

திராவிட மாடல் 2.0விற்கு பெண்கள் மகுடம் சூட்டி நிரூபிப்பார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுவதாக பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். 

மற்றொரு பத்திரிகையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என்றும் அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது எனவும் வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

 முதலமைச்சரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன எனவும் அமைச்சர் நேரு கூறினார். 

தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு என்றும் திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் எனக்கூறிய அமைச்சர் நேரு, தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

45% என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும் என்றும் அதற்கு திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்களாம் ஒரு முதல்வர்? கிரிமினல்களின் சொர்க்க பூமி தமிழ்நாடு...! அதிமுக கடும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share