×
 

TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

நாகர்கோவில் சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழக ஆட்சியில் எந்த துறையிலும் கமிஷனே கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கமிஷன் கேட்டால் லஞ்சம் கேட்டால் அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது மக்களின் கடமை என்றும் கூறினார். அரசுத் துறையில் லஞ்சம் கேட்டால் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது பொதுமக்களின் கடமையென்றும் கூறி இருக்கிறார்.

பழனி முருகன் கோவில் நில பத்திரப்பதிவு விவகாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இல்லை என்று அவர் தெரிவித்தார். திமுக சார்ந்தோரால் கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் முழுவதும் போலிப் பத்திரங்கள் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். போலி பத்திரம் தொடர்பாக கவனத்திற்கு வந்தால் புகார் தாருங்கள் என்றும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் என்பது சதவீதம் மேல் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறிய அமைச்சர் நிர்மல் குமார் திருவான்மியூர் உத்தண்டி உயர் மட்ட மேம்பால திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது என கூறினார். மேகதாது அணைக்கட்ட 100% தமிழ்நாடு அரசு அனுமதிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கரூர் சம்பவம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது..? அரசுப்பணி சரிதான்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!

நாகர்கோவில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share