மினிஸ்டர் பி.ஏ.வுக்கே இந்த கதியா? - அமைச்சர் நிகழ்ச்சியிலேயே உதவியாளரை அடி வெளுத்த திமுக உ.பி.க்கள்...!
முதுகுளத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பணின் அலுவலக உதவியாளர் மீது தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழகம் தொடர்பான கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. முதுகுளத்தூர் தொகுதி என்பதனால் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பனின் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் அலுவலக உதவியாளர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இதில் கலந்துகொண்ட கடலாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாயகிருஷ்ணன் மற்றும் கடலாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பனின் சட்டமன்ற அலுவலக நேர்முக உதவியாளர் டோனி என்பவரை கொடூரமாக தாக்கி உள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான அமைச்சரின் உதவியாளர் டோனி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING மன்னிப்பு கேட்ட சென்னை ஆணையர் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு...!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு மற்றும் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தரப்பு இடையே நீண்ட காலமாக பனி போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: லாக் அப் மரணங்கள் ... உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்