×
 

பருவதமலை பிரச்சனை..! பேரவையில் வலுக்கும் கோரிக்கை.! அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

பருவதமலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பருவதமலை, பக்தர்களால் தென் கைலாயம் என்று போற்றப்படும் புனிதத் தலமாகும். சுமார் நான்காயிரத்து ஐநூற்று அடி உயரமுள்ள இந்த மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் மற்றும் பிரம்மராம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். மலையேற்றம் கடினமானது என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி காலை ஐந்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு நூறு பக்தர்கள் என்ற அளவில் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருநூறு பேருக்கு நேரடி அனுமதியும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணூறு பேருக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதியும் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் தினசரி சுமார் ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. பதினெட்டு வயதுக்குட்பட்டோர், அறுபது வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையும் உள்ளது.இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக பல பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வெகுதூரத்திலிருந்து வரும் குடும்பங்கள் முன்பதிவு கிடைக்காமல் திரும்பிச் செல்ல நேரிடுகிறது. ஆன்லைன் முன்பதிவு முறை சிலருக்கு அணுக முடியாததாக உள்ளது. சிறப்பு நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் அனுமதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நீண்ட காத்திருப்பு, ஏமாற்றம் மற்றும் அவதி ஏற்படுகிறது. மலையின் இயற்கை அழகு மற்றும் ஆன்மீக அனுபவத்தை அனுபவிக்க விரும்பும் பலர் வாய்ப்பை இழக்கின்றனர்.

இதையும் படிங்க: களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

பாதுகாப்பு காரணமாக இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்றாலும், பக்தர்களின் ஆர்வத்தை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தப் பிரச்சினை சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பருவதமலையில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் ஏற்படும் அவதியை சுட்டிக்காட்டினர். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பக்தர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தேவையான வசதிகளை மேம்படுத்தி அதிகமானோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தலைப்பில.

 

 

 

இதையும் படிங்க: கோயில் திருப்பணிகளில் அர்ச்சனா கல்பாத்தி..! நியமனத்தின் பின்னணி இதுதானா..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share