×
 

எல்லாம் ரெடி... வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்... அமைச்சர் சிவசங்கர் உறுதி...!

வடகிழக்கு பருவமழையை மின்வாரியம் எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.

ஒவ்வொரு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின்வாரியத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!

தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மின்சார தேவை மற்றும் உற்பத்தி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக அமைச்சர். சிவசங்கர் கூறினார். 

இதையும் படிங்க: கச்சத்தீவு கேடுகெட்ட நாடகம்… முதல்வரா போஸ்ட் மாஸ்டரா? பூந்து விளாசிய சீமான்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share