×
 

தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

சட்டப்பேரவையில் வேளாண் துறை என்று முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வினோத் வெளியிட்டார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

வேளாண் துறையின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் அறிவித்தார். கிடங்குடன் நான்கு புதிய வேளாண் விரிவாக்க கட்டடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் புதிய விதைநெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 6.84 கோடி தேனீ வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

திருவாரூர், தர்மபுரி, ஈரோடு, ராணிப்பேட்டையில் புதிய துணை வேளாண்மை விரிவாக்கம் மைய கட்டிடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மூங்கில் துறைப்பட்டு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 8.58 கோடி ரூபாயில் மின்மோட்டார்கள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். தேனீ வளர்ப்பினை ஊக்கப்படுத்த தேனீ வளர்ப்பு பெட்டி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

செங்கல்ராயன், திருத்தணி, வேலூர், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகள் ஆறு கோடி ரூபாயை தானியங்கி மயமாக்கப்படும் என்ற தெரிவித்துள்ளார். மேலும் 10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பிற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். பரிமிளகாய், பொய்யூர் கத்திரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய் உள்ளிட்ட பத்து வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 285 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 600 விற்பனை முனைய கருவிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share