வாய்க்கால் தூர்வாரல் முதல் விவசாயிகள் நலத்திட்டம் வரை..! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் பேட்டி..!!
கும்பகோணத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நீண்ட காலமாக தூர்வாரப்படாத சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்றும் எல்நினோ காரணமாக கனமழை பெய்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்க கூடாது என்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே ஸ்ரீ நகர் காலனி என்ற பகுதியில் உள்ள உள்ளூர் கிளை வாய்க்கால் தூர் வாரும் பணியினை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வினோத், எல் நினோ காரணமாக கன மழை பெய்தால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு வாய்க்கால்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாகவும் குறிப்பாக சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது.
அதனை தூர்வாரப்படும் என்றும் இதனால் வயல்வெளியில் தண்ணீர் தேங்காது என்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். உழவர்கள் உரிமை தொகை பல இடங்களில் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் கிடைக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?
இது தொடர்பாக ஓரிரு இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன அவை சீர் செய்யப்படும் என்றார். நலிவடைந்த உழவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என்னவாயிற்று எனக் கேட்டதற்கு இது பின்னர் தெரிவிக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார் .
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே ஹேப்பி நியூஸ்... பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்... டெண்டரை தட்டித்தூக்கிய ‘ஹீரோ சைக்கிள்ஸ்’...!