புளுகு மூட்டை இபிஎஸ்... அம்புட்டும் தப்பு கணக்கு..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்...!
பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி தொடர்ந்து செயல்படுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகளிடமிருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கத்தை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள் தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என முதலமைச்சர் கூறியுள்ளார். எதிர்கட்சிதலைவர் சொன்னவை புளுகு மூட்டைகள் என்பதை திராவிட மாடல அரசின் தொடர் செயல்பாடு நிரூபித்து விட்டது என்றும் தெரிவித்தார். பருவமழை காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்று இபிஎஸ் செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
ஆக்கப்பூர்வமாகவும் மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று கூறினார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளும் திமுகவுக்கு உண்டு என்றும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மூலமாக தமிழகத்தில் வெற்றி பெற்று விடலாம் என தப்பு கணக்கு போடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்பீம் TO பைசன்..! படம் பார்க்க மட்டும் டைம் இருக்கா ஸ்டாலின்? விவசாயிகளுக்காக குரல் கொடுத்த EPS…!
நேரடியாக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் வலிமை இல்லாதவர்கள் வாக்குரிமையை பறித்து வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர் என்றும் மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டு வெற்றி பெறலாம் என்ற கணக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்பு கணக்கு எனவும் கூறியுள்ளார். ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் மக்களின் உரிமை காக்க திமுகவினருக்கும் தோழமைக் கட்சியினருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் வருகைக்காக பனைமரம் வெட்டப்பட்டதா? முற்றுப்புள்ளி வைத்த TN FACT CHECK...!