தனது சொந்தத் தொகுதியில்..! காவல் நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!
தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டை வைத்தார்.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு கட்டுமானங்களும் நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புற காவல் நிலையம் கட்டப்பட உள்ளது. அது மட்டுமல்லாது காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவையும் கட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது பெரியார் நகரில் செயல்பட்டு வந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே கட்டப்பட உள்ள பெரவள்ளூர் புறக்காவல் நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் கொளத்தூரில் 11.37 கோடி ரூபாயில் காவல் துறை ஆணையர் அலுவலகம் கட்டுமான பணிக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் உள்ளார். தொடர்ந்து சென்னை கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: நியாயமான கோரிக்கை தான்..! ஆசிரியர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான்...!
சென்னை பெரிய மேட்டில் பதிவுத்துறை சார்பில் 3.86 கோடி கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் கொளத்தூர் தொகுதியில் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 5.24 கோடி ரூபாய் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும் திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு… அண்ணாமலை கடும் கண்டனம்..!