×
 

களைப்பிற்கே இடமில்ல! இனி சுறுசுறுப்பு, புன்னகை, ஆர்வம் மட்டும் தான்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் புன்னகை மற்றும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் உரையாற்றினார். இந்த நாள் மனதிற்கு மிகவும் நிறைவான நாள் என்றும் இருபது லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள் என்பதை விட வேறு என்ன வேண்டும் எனவும் கேட்டார். பஞ்சாப் முதலமைச்சரும், தனது நண்பருமான பகவந்த் மானை நேரில் சந்தித்தது இந்த நாளின் கூடுதல் சிறப்பு என தெரிவித்தார். தனது பல்வேறு பணிகளை இடையில் நேரம் ஒதுக்கி தமிழ்நாட்டிற்கு வந்த பஞ்சாப் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்க கெஜ்ரிவால் வந்தார் என்றும் காலை உணவு திட்ட விரிவாகத்திற்கு பகவந்த் மான் வந்துள்ளார் எனவும் கூறினார்.

பசிப்பிணி இல்லாத நாடே சிறந்த நாடு என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இந்த நாள் அமைந்துள்ளது என்றார். நீதிக்கட்சி ஆட்சியில் மாநகராட்சி பள்ளிகளில் இலவச உணவு வழங்கப்பட்டதாகவும், அதன் பின் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார். காமராசரை தொடர்ந்து நமது திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் பலர் காலையில் சாப்பிடாமல் வருவதை, அறிந்து 2022 ஆம் ஆண்டு முதல் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன் என்றும் இதுவரை காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர் இனி 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கும்! குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

காலை உணவு திட்டத்தால் ஆண்டுக்கு 600 கோடி செலவிடும் தொகையை, கூடுதல் செலவு என்று கூற மாட்டேன் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், காலை உணவு திட்டத்திற்கு செலவுத்தொகை, தமிழ் சமுதாயத்திற்கு எதிர்காலத்தில் பல மடங்கு லாபம் தரும் முதலீடு என்றார். மாணவர்களின் சோர்வான முகங்களை காண வேண்டியதில்லை என்றும் புன்னகை, ஆர்வம், சுறுசுறுப்பு நிறைந்த முகங்களை காணலாம் எனவும் பேசினார்.

பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நிறைவாக உண்பதால் கல்வி மட்டுமின்றி எதிர்பாராத பல நன்மைகளும் ஏற்பட்டுள்ளன என்றார். கற்றல் திறன் மேம்பாடு, நோய் தொற்று குறைவு போன்ற பல நன்மைகள் காலை உணவு திட்டத்தால் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆலோசித்து வருகின்றன எனவும் கனடாவில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு நான் முன்னோடி என்பது பெருமை என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் வேலை படிப்பது தான். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற வேண்டும் என்பதை எனது விருப்பம் எனவும் தெரிவித்தார். காலை உணவு தயாரிக்கும் பெண்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்வதுபோன்று தாய் உள்ளத்துடன் சமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காலை உணவு திட்டத்திற்கு சமைக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்... குழந்தைகளுடன் உணவருந்திய முதல்வர்கள்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share