2 மாவட்டங்களில் டைரக்ட் விசிட்... திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!
2 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசின் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையச் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு முக்கிய அங்கமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி, அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்து, புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பது என்பது தொடர்ச்சியான நடைமுறையாக உள்ளது.
இது 2023-இல் தொடங்கப்பட்ட “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. அத்திட்டத்தில், மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றைப் பார்வையிட்டு, திட்டங்களின் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது முதலமைச்சரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அது முதல், பல மாவட்டங்களில் இதுபோன்ற ஆய்வுகளும் புதிய திட்டங்களின் தொடக்க விழாக்களும் நடந்து வருகின்றன.
இந்தக் கள ஆய்வுகளின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உள்ளூர் மக்களுடன் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனடி தீர்வுகளை வழங்குவதோடு, முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இதையும் படிங்க: நயினாருக்கு எரிச்சலா? திமுகவின் இந்துமத வெறுப்பு... பதிலடி கொடுத்த தமிழிக பாஜக...!
தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். நாளை கள்ளக்குறிச்சியிலும் நாளை மறுநாள் திருவண்ணாமலையிலும் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். கள்ளக்குறிச்சியில் 1173 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் 139 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆட்சியரகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் திருவண்ணாமலையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் 2095 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: ஆளும் திறனற்ற திமுக... திட்டக்குடி விபத்தை சுட்டிக்காட்டி கண்டித்த நயினார்..!