×
 

நயினாருக்கு எரிச்சலா? திமுகவின் இந்துமத வெறுப்பு... பதிலடி கொடுத்த தமிழிக பாஜக...!

நயினார் நாகேந்திரன் எரிச்சலில் இருப்பதாக கூறப்பட்ட விமர்சனத்திற்கு தமிழக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மதச்சார்பின்மை என்னும் தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலையத் தொடங்கிவிட்டது என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறார் என்றும் திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்தை மாற்றி, வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு கும்பல், உள்நோக்கத்தோடு பல காலமாகச் செயல்பட்டது எனவும் கூறப்பட்டது.

மலைப்பகுதியில் இருக்கும் தர்காவுக்கு தூணில் தீபம் ஏற்றுவதன் மூலமாக இரு மதப்பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கி, அதன் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்றும் இதனை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை., கலவரம் ஏற்படுத்தப் பார்த்தவர்கள் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டது தமிழ்நாடு அரசு என்றும் அந்த எரிச்சலில்தான் நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன் எரிச்சலில் இருப்பதாக கூறப்பட்டதற்கு தமிழக பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபமேற்றவிடாத திமுகவின் இந்து மத வெறுப்பிற்கு எதிராக பூர்ணசந்திரன் தன்னையே தீபமாக்கிக் கொண்டார் என்றும் அவர் உடலில் பற்றிய அந்நெருப்பு எங்கள் உள்ளங்களை ஒவ்வொரு நிமிடமும் ரணமாக்கிக் கொண்டிருக்கிறது எனவும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆளும் திறனற்ற திமுக... திட்டக்குடி விபத்தை சுட்டிக்காட்டி கண்டித்த நயினார்..!

இப்படிப்பட்ட கொடூர நிகழ்விற்குக் காரணமான கொடுங்கோல் திமுக அரசு இன்னும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் எரிச்சலில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் சிறுபான்மையினக் காவலர் என்ற போர்வையில் காலங்காலமாக இரு மதங்களுக்கிடையே கலவரத்தை மூட்டி, அரசியல் பிழைப்பு நடத்தும் திமுக எனும் தீயசக்திக்கு எதிரான அறத்தின் நெருப்பு இது, அத்தனை எளிதில் அணையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்ற தீபத்தூணைக் கார்த்திகை தீபத்தன்று இருளில் மூழ்கடித்துவிட்டு, கோயில் நலனைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையை ஏவி கோயிலின் உரிமைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு, தீபம் ஒளிர்ந்தால் சட்டம் ஒழுங்கு பாழாகிவிடும் என்று ஒருசாராரை அடக்கி மறு சாராரின் கொடியேற்ற விழாவிற்குப் பாதுகாப்பு அளித்த திமுக எனும் இந்து மத வெறுப்பு அமைப்பின் அஸ்தமன நிழலில் மட்டுமே இந்த எரிச்சல் அடங்கும் என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: திட்டக்குடி துயரச் சம்பவம்... உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share