கொளத்தூர் வெற்றி தீர்மானிக்கப்பட்டதே...! பெருமையுடன் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்...!
கொளத்தூர் தொகுதியில் தான் பேசிய உரையை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் தான் பேசிய உரையை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது; இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் S.I.R. பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், நாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது. மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவிற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
எவ்வாறு விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார். நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாகவே வாக்குத் திருட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைப்பது மட்டுமல்லாமல், ஆதாரங்களோடு அதைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காடி பேசினார்.
ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து இது சம்மந்தமாக கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கட்சிப் பாகுபாடின்றி பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அது நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நம்மை விமர்சிக்கும் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சிகளாக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அந்த கூட்டத்தையும் கூட்டினோம். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனது சொந்தத் தொகுதியில்..! காவல் நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!
நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் ஒருமாத காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லோருடைய கணக்கீட்டுப் படிவமும், அதாவது நாம் வாக்காளராக சேரும் விண்ணப்பப் படிவம் அதைத்தான் கணக்கீட்டுப் படிவம் என்று சொல்கிறோம். கணக்கீட்டுப் படிவம் என்றாலும் சில பேருக்குப் புரியாது என்று கூறினார். கொளத்தூரில் வெற்றி என்பது, நிர்ணயிக்கப்பட்ட வெற்றிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் பணியைப் பொறுத்தவரை, நான் வெற்றி பெறுவதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். தனது உரையை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: நியாயமான கோரிக்கை தான்..! ஆசிரியர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான்...!