ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!
சூழும் ஆரிய சூழ்ச்சிகளை சுக்கு நூறாக உடைத்தெறிவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறி உள்ளார்.
தென்னிந்திய வரலாற்றில், குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்று நீதி கட்சி (Justice Party). இதனை முறைப்படி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று 1916-இல் சென்னை விக்டோரியா பொது மன்றத்தில் தொடங்கினார்கள். ஆனால் மக்கள் மத்தியில் இது நீதி கட்சி என்றே பிரபலமானது. நீதி என்ற சொல்லே ஆங்கிலேயர் கொண்டு வந்த Justice என்ற கருத்தைத்தான் குறிக்கிறது. அதாவது நீதியை நிலைநாட்டுவோம் என்ற கொள்கைப் பிரகடனம்.
டாக்டர் டி.எம். நாயர், சர் பி.டி. தியாகராய செட்டியார், டாக்டர் சி. நடேசனார் ஆகியோர் முன்னின்று பிராமணரல்லாதோருக்கான தனி அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். 1916 நவம்பர் 20-ஆம் தேதி சென்னையில் நடந்த மாபெரும் மாநாட்டில் நீதி கட்சி உதயமானது.
நீதி கட்சியின் முக்கிய கொள்கை பிராமணரல்லாதோருக்கு சம உரிமை என்பதாகும். இதை அவர்கள் Communal Representation (சமுதாய அடிப்படையிலான பிரதிநிதித்துவம்) என்று வலியுறுத்தினார்கள். அதாவது அரசு வேலை, கல்வி இட ஒதுக்கீடு, சட்டமன்ற உறுப்பினர் தேர்வு ஆகியவற்றில் பிராமணரல்லாதோருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது முதன்மை கோரிக்கையாக இருந்தது. இது இன்றைக்கு நாம் இட ஒதுக்கீடு என்று அழைப்பதற்கு முந்தைய முதல் திட்டமிட்ட போராட்டம் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: வஞ்சிப்பதே வேலை... மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து மத்திய அரசு... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்...!
நீதி கட்சி உதயமான நாளான இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற Non Brahmin Manifestoவைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று என்று தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்று கூறினார். சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது தரம் இல்லையா? கேள்வி கேளுங்க., அப்ப புரியும்... ஆளுநருக்கு அன்பில் மகேஷ் சவால்...!