நமது உயர்நிலைக் குழுவை ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றும் - முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்..!
தமிழக அரசின் உயர்நிலைக் குழுவை ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
குரியன் ஜோசப், இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும், கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். இவர் 1979 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். 1987 இல் அரசு வழக்கறிஞராகவும், 1994-1996 காலகட்டத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். 1996 இல் மூத்த வழக்கறிஞராக உயர்ந்த இவர், 2000 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2010 முதல் 2013 வரை இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2013 முதல் 2018 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். கல்வி மற்றும் சட்டச் சேவைகள் தொடர்பான பல்வேறு பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.
குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தொடர்பான விவரங்கள், தமிழ்நாடு அரசின் மாநில உரிமைகள் மற்றும் மத்திய-மாநில உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பாக முக்கியமான ஒரு முயற்சியாக அமைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, மாநில உரிமைகள், மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதாகும். இந்தக் குழு, தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசின் தலையீடுகளிலிருந்து பாதுகாக்கவும், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இந்த குழு தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் வீக்கமாகுமே தவிர, அது வலிமையாகவோ வளர்ச்சியாகவோ ஆகாது என கூறினார். அதுவும் ஒரு துணைக்கண்டத்துக்குரிய வேற்றுமைகளோடு பரந்துபட்டுள்ள இந்தியா போன்ற ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சியும் மாநில சுயாட்சியும் அடிப்படையாகவே இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: திமுகவை வேரோடு அகற்றணுமா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர் தெரியுமா! ... மனம் திறந்த அப்பாவு
இதை உணர்ந்துதான் தி.மு.க.வின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே அரசியலமைப்பில் திருத்தம் கோரியதில் இருந்து, ஆட்சியில் இருந்த காலத்தில் இராஜமன்னார் குழு, மாநில சுயாட்சித் தீர்மானம் என நாம் தொடர்ந்து அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
திராவிட மாடல் அரசு சார்பில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் நாம் அமைத்துள்ள உயர்நிலைக் குழு இனி இந்தியா செல்ல வேண்டிய பாதையைக் கோடிட்டுக் காட்டும் என்றும் தமிழ்நாடு காட்டும் வழியை ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கான மகத்தான ஆட்சி திமுக! எவ்வளவு திட்டங்கள் வந்திருக்கு தெரியுமா? லிஸ்ட் போட்ட அமைச்சர்