"குடும்பத்துடன் லண்டன் சென்ற ஸ்டாலின்"..! சென்னை ஏர்போர்ட்டில் திரண்ட திமுகவினர்..!
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 5-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் அவரது பேரனான இன்பநிதி உதயநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாகும். உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, லண்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
பட்டமளிப்பு விழா ஜூலை மாதத்தில் அந்தக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரன் இன்பநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் லண்டன் செல்ல உள்ளார். பயணத்தின் போது குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார்கள்.
இன்பநிதி தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறார். பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு, மு.க.ஸ்டாலின் லண்டனிலேயே சுமார் 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். தொடர் அரசியல் பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளால் களைப்புற்ற அவர், இந்த பயணத்தை குடும்பத்துடன் செலவிடும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!
பல்வேறு தகவல்களின்படி இந்த ஓய்வு பயணம் சுமார் 15 நாட்கள் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஜூலை 20-ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. லண்டன் செல்வதற்காக விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!