×
 

கனமழை எச்சரிக்கை... எல்லாம் ரெடி! NO PROBLEM... முதல்வர் ஸ்டாலின் பேட்டி...!

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். பின்னர் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னையிலும் அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் கூறினார். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று கூறினார். டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை என்பதால் திடீர் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.

இதையும் படிங்க: கவின் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 5 கோடி மானியம்... மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்...!

புயலை எதிர்கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த கனமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் உணவுப் பொருட்களும் கையிருப்பில் உள்ளது எனவும் கூறினார். 

இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share