×
 

கவின் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 5 கோடி மானியம்... மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்...!

இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்திற்கு 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிக பெண்கள் பட்டம் பெற்றது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். நாடகம் மற்றும் திரைத்துறை கலைஞன் என்ற முறையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

நடிகர் சிவக்குமார் மற்றும் ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதில் மகிழ்ச்சி என்றும் கூறினார். மதுரை வளையங்குளத்தில் கிராமிய கலைகள் பயிற்சி பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கவின் கலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு பிரிவு தொடங்கப்படும் என அறிவித்தார்.

இசை மற்றும் கவின் பல்கலைக் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் கவின் கலை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். AI போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அனைத்து முதலமைச்சர்களுடனும் பழகியவர் சிவகுமார் என்றும் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

கொரோனா நிதி பங்களிப்பாக நடிகர் சூர்யா, கார்த்திக் உடன் வந்து ஒரு கோடி ரூபாய் சிவகுமார் தந்தவர் எனவும் கூறினார். நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை எனவும் தெரிவித்தார். அம்மையார் ஜெயலலிதாவின் பல்கலைக்கழகத்திற்கு எந்த ஒரு பாகுபாடும் காட்டவில்லை என்றும் கூறினார். 

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை... என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share