கைவிட மாட்டோம்... தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்..! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு...!
தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். 31,373 தூய்மை பணியாளர்கள் இந்த இலவச உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
இதையும் படிங்க: 100வது நாளை எட்டிய தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!! சென்னை ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீஸ்..!!
பணியின் போது உயிரிழப்பவர்களுக்கு நிவாரணத் தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுய தொழில் மானிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளி… அரசியலில் பரபரப்பு..!