×
 

#BREAKING: புளி வணிக மையம், 4 வழிச்சாலை... தர்மபுரிக்கு மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

தர்மபுரி மாவட்டத்திற்கான முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தர்மபுரியில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தர்மபுரியின் வளர்ச்சி என்றாலே அதை திமுக ஆட்சியில் தான் என தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். வேளாண்மையின் மைந்தனாகவும் நாளும் உழைத்து கொண்டிருப்பவர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் என்ற புகழாரம் சூட்டினார்.

இணையத்தில் விண்ணப்பித்த அன்றே விவசாய கடன் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாக கூறினார். தர்மபுரியில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் திமுக ஆட்சியில் வேளாண் மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்... விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் தூத்துக்குடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எனது மேற்பார்வையில் தான் நடந்தது என்று தெரிவித்தார் 

63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். புளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தர்மபுரியில் 11 கோடி ரூபாய் செலவில் புலி வணிக மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.  

ஒகேனக்கல் தர்மபுரியை இணைக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். நல்லம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7.5 கோடி புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என அறிவித்தார். ஆட்டுக்காரன்பட்டி - பெண்ணாகரம் வரை இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், அரூர் வள்ளி மதுரையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: களம் கண்ட துறைகளில் முத்திரை பதித்தவர்... முரசொலி மாறனுக்கு முதல்வர் புகழாரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share