2,074 கோடி ரூபாயில் திட்டப் பணிகள்... தென்காசியின் வளர்ச்சி மலைக்க வைக்கிறது! முதல்வர் பெருமிதம்...!
தென்காசி மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பூலி தேவன் போன்ற பெருமக்களை தந்த மண் தென்காசி என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
வடக்கே ஒரு காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பெருமை வாய்ந்த நகரம் தென்காசி என்றும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் பேசிய அன்பு மகள் பிரேமாவிற்கு வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும் வாக்குறுதிபடி நடைபெறும் வீடு கட்டும் பணியை நேரில் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.
குடிசை இல்லா தமிழ்நாடு அமைய ஏராளமான திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டை பயனாளிக்கு ஒப்படைத்தது பெருமை அளிப்பதாகவும் கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம் என்றும் 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா ஒன்பது லட்சம் பேருக்கு புதிதாக முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்... சிபிஐ விசாரணை கோரும் நயினார்...!
வருவாய் துறையிடம் சான்று வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் தமிழ்நாடு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தென்காசியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது என்றும் 15 ஊர்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மாவட்டம் தோறும் அரசு விழாக்களில் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் தென்காசி மாவட்டத்தில் மட்டும் நான்கு ஆண்டுகளில் 2,074 கோடி 37,221 வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாணவிக்கு வீடு! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...!