ஆம்புலன்ஸ் டிரைவர் மேல எதிர்க்கட்சித் தலைவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏன்? MLA எழிலன் கேள்வி..!
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது எதிர்க்கட்சி தலைவருக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன் என mla எழிலன் கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கலந்துரையாடும் அவர், மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அல்லது அவரது கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். திமுக எம்எல்ஏவும் மருத்துவர் அணி செயலாளருமான எழிலன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருச்சி துறையூரில் இபிஎஸ் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களால் பாலியல் தொல்லை! அப்பா ஸ்டாலின் இது தான் பள்ளிக் கல்வித்துறை பொற்காலமா? - நயினார்
மயங்கி விழுந்தவரை அழைத்து வரவே ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது என கூறினார். ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கும்! குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்