வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கும்! குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

நாட்டுக்கே முன்னோடியாக நமது பணிகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஒரு முன்னோடி முயற்சியாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. இத்திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. முதற்கட்டமாக, மதுரை மாவட்டத்தில் 15 செப்டம்பர் 2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 25 அன்று, திருக்குவளையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இதன்படி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், 2024 ஜூலை 15 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டு, 2,23,536 மாணவர்கள் கூடுதலாக பயன்பெற்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வரும் 26 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 3 லட்சத்து 5 ஆயரத்து மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக-காரங்க சம்பாதிக்கதான் சமூக நலத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும்! அண்ணாமலை ஆவேசம்

நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குவதாகவும், இது உணவு மட்டுமல்ல., உயர்வுக்கான உரம் என்றும் கூறினார். வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும் என்றும் தமிழ்நாடு நாளும் உயரும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: நமது உயர்நிலைக் குழுவை ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றும் – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी