×
 

பட்டியலில் இருந்து நீக்கியது விதிப்படி தவறு.. மமக கட்சி தொடர்ந்த வழக்கு... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி வழக்க தொடர்ந்து உள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த மனிதநேய மக்கள் கட்சி (மமக), தற்போது ஒரு தீவிரமான சரிவைச் சந்திக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய உத்தரவின்படி, இந்தக் கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு நிர்வாக நடைமுறை மட்டுமல்ல. கட்சியின் பல ஆண்டுகளின் அரசியல் பயணத்தின் முடிவுக் கட்டமாகவும், தமிழக அரசியலில் சிறு கட்சிகளின் இருப்புக்கு வலியுறுத்தல் கொண்ட நிகழ்வாகவும் அமைகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் 2025 செப்டம்பர் 20 அன்றைய உத்தரவு வந்தது. தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வதாக அறிவித்த அந்த உத்தரவு, செயல்பாட்டில் இல்லாத கட்சிகளை இலக்காகக் கொண்டது. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றன.

மனிதநேய மக்கள் கட்சியும் இதில் சேர்க்கப்பட்டது. கட்சி கடந்த மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்தாலும், தனி அடையாளமின்றி போட்டியிட்டதால், தேர்தல் ஆணையம் அதை செயல்பாட்டில் இல்லை என்று கருதியது. 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் விதிகள் 2014ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டன என்றும் விதிகளின்படி, தேர்தல் ஆணையர்கள்தான் இதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியும்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட அறிவுசார் புத்தகக் கண்காட்சி... முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...!

ஆனால், செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. 

இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share