"ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!
யூடியூபர் முக்தார் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளரும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனுமான அலிசா அப்துல்லா தனது இரட்டைப் பச்சிளம் குழந்தைகள் உட்பட தன்னைப் பற்றி ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து திருச்சி சூர்யாவை கைது செய்தனர். முக்தார் தலைமறைவாக உள்ளார்.
அலிசா அப்துல்லா ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் பெரும் பின்தொடர்வைப் பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு இரட்டைப் பச்சிளம் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் நடைபெற்ற விவாதங்களில் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் அலிசாவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து மிகவும் தரக்குறைவான, ஆபாசமான மற்றும் பாலியல் சாய்வு கொண்ட கருத்துக்களை வெளியிட்டதாக அலிசா குற்றம் சாட்டினார். இந்தக் கருத்துக்கள் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அவரது பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று அலிசா புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். புகார் அளித்த பின்னர் நிருபர்களிடம் பேட்டி அளித்த அலிசா, ஆவேசத்துடன் பேசினார். தனது குழந்தைகளை இழிவுபடுத்தியதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: போலீசிடம் கம்பி நீட்டிய விசாரணை கைதி.! கண் அயர்ந்த நேரத்தில் தப்பியோடிய பலே கில்லாடி..!
புகாரைப் பெற்ற சென்னை மத்திய குற்றப்பிரிவின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக ஜூன் 4 அன்று திருச்சி சூர்யாவை சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியான யூடியூபர் முக்தார் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது youtuber முக்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!