"திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!
மதுரை திருமங்கலத்தில் திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மர்மக் கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா இலுப்பங்குளத்தை சேர்ந்தவர் கலாநிதி. திமுக பிரமுகரும், முன்னாள் கள்ளிக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளருமான இவர், நேற்று இரவு 11 மணி அளவில் கள்ளிக்குடியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கே. சென்னம்பட்டியை சேர்ந்த நண்பர் ஹரிஹரன் (30) மற்றும் இலுப்பங்குளத்தைச் சேர்ந்த உறவினர் அஜித் (25) குராயூருக்கு சென்ற போது, சோளம் பட்டி குதிரை கோவில் அருகே பின்னால் பொலிரோ காரில் துரத்தி வந்த ஒரு கும்பல் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது காரில் இருந்த கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வருவதை கண்ட ஹரிஹரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இந்த நிலையில் அந்த கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால்கலாநிதியை சரமாரியாக வெட்டி உள்ளனர். கலாநிதி உடன் வந்த உறவினர் அஜித்தையும் வெட்டியபோது காயத்துடன் அஜித் தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் கலாநிதி முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கலாநிதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!
இந்நிலையில்தப்பி ஓடிய அஜித் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிக்குடி போலீசார் இறந்த கலாநிதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் காயமடைந்த அஜித்தையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுதப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இறந்த கலாநிதிக்கும் மற்றொரு கும்பலுக்கும் ஏற்கனவே ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதனால் அந்த கும்பல் கலாநிதியை கொலை செய்தார்களா ? அல்லது வேறு யாருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!