×
 

விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசு? ஐயா வைகுண்டர் சர்ச்சை கேள்வியால் நயினார் கடும் கோபம்

இனிமேலாவது விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசின் பணியாளர் தேர்வாணையம் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, the god of hair cutting என்று மொழிபெயர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்ப்பு இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, 2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது என்பதை, It Begged the United Nations award என்பதை பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதாரமெடுத்த ஐயா வைகுண்டர் அவர்களைப் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆங்கில கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த மொழியிலும் பெயரினை அப்படியே எழுதுவதுதான் வழக்கம்., அப்படியிருக்கையில், பெயரை மொழிபெயர்த்து சொல்கிறேன் என்று மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் ஐயா வைகுண்டர் திருநாமத்தை இப்படி இழிவு செய்வது முறையா என்று கூறினார்.

இதையும் படிங்க: இளைஞர்கள் எதிர்காலம் கிள்ளுக் கீரையா? TNPSC தேர்வுத்தாளில் கவனக்குறைவு... அண்ணாமலை கண்டனம்..!

இதே TNPSC தேர்வில், தன் தந்தையார் குறித்தோ, அல்லது, திமுக தலைவர்கள் குறித்தோ இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா என்றும் தற்போது நடந்த இத்தவறு மிகவும் கண்டத்திற்குரியது என்றாலும், இதில் எந்தவொரு உள்நோக்கமும் இருக்காது என்று நம்புவதாகவும். மீண்டுமொரு முறை, இதே போன்ற தவறு நிகழாதிருப்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share